சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பாணந்துறை, வலபொல பிரதேசத்தில் உள்ள வீதியில் வைத்து சந்தேகநபரிடம் இருந்து சுமார் இரண்டு கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை வலபொல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரை இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.