தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திற்கு காட்டிக்கொடுக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேர்தல் உள்ளிட்ட வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கட்சிக்குள் வலுவான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான கட்சிகளும் இதே கருத்தையே கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசாங்க உரிமை உள்ளதால், எந்த நேரத்திலும் அரசாங்கத்திற்கு தனது கருத்தை தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகுவீர்களா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயார் எனவும் தெரிவித்தார்.