நீண்ட காலம் மாத்தளை மேலதிக மாவட்ட ஆணையாளராக கடமையாற்றிய அவர் கண்டி மாநகரசபையின் மாநகர ஆணையாளராக ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் நுவரெலியா பிரதேசத்தில் சுற்றுலா ஊக்குவிப்பு செயற்பாடுகள் மற்றும் நகர அபிவிருத்தி செயற்பாடுகளை முறையாக நிர்வகிப்பதற்காகவே இவர் இங்கு நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவிக்கின்றது.