Our Feeds


Thursday, May 30, 2024

SHAHNI RAMEES

பலஸ்தீன் - ரஃபா பகுதியில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலா ஓதுவோம் - ACJU

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு


பலஸ்தீன் - காஸாவில் பல மாதங்களாக தொடர்ந்து

தாக்குதல்கள் நடாத்தப்பட்டு, தற்போது அங்குள்ள ரஃபா எனும் பகுதியில் கொடூரமான தாக்குதல் நடாத்தப்பட்டு வருகின்றது. இத்தாக்குதலில் அப்பாவி முஸ்லிம்களில் பலர் உயிரிழந்தும் இன்னும் அதிகமானோர் காயமுற்றும் வருகின்றனர்.


எனவே அப்பகுதியில் இடம் பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்படவும் அமைதி, சமாதானம் மற்றும் நீதி நிலை நாட்டப்படுவதற்கும் அனைத்து மஸ்ஜித்களிலும் பஜ்ர் தொழுகையில் ஓதக்கூடிய குனூத்தை ஐவேளைத் தொழுகைகளில் மஃமூம்களுக்கு சடைவில்லாமல் ஒரு மாதகாலத்திற்கு ஓதிவருமாறும் அதில் பின்வரும் துஆக்களை சேரத்துக் கொள்ளுமாறும் மஸ்ஜிதுடைய இமாம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.


மேலும் இந்த சங்கையான மாதத்தில் தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா மற்றும் இஸ்திஃபார் போன்ற நல்லமல்களைச் செய்வதில் கூடிய கவனம் செலுத்தி துஆப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அனைத்து முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.


முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


 

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்

செயலாளர் - ஃபத்வா குழு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »