ஆர்ஜென்ரீனா ரயில் விபத்தில் 90 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
ஆர்ஜென்ரீனா தலைநகர் ப்யூனொஸ் அயர்சிலிருந்து 7 பெட்டிகளை கொண்ட பயணிகள் ரயிலொன்று நேற்றுமுன்தினம் (10) வடக்கு புறநகர்ப் பகுதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டி மீது வேகமாக மோதி தடம் புரண்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்த பயணிகளை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.