மே மாதம் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல் 26ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் இந்த வாரம் தொடர்பான நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.