Our Feeds


Friday, May 10, 2024

ShortNews Admin

“இன்னும் 69 இலட்சம் மக்கள் எங்களுடன் இருக்கிறார்களா இல்லையா தெரியல”


 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் நிலையம் இன்று (10) பத்தரமுல்ல ரஜமால் தோட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை அலுவலகங்கள் தொகுதிகள் மட்டத்திலும் திறக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பரந்த பிரச்சாரப் பொறிமுறை தயார் செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன மேலும் தெரிவித்துள்ளது.

இங்கு பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்;
“.. வேட்பாளர் இன்னும் கிடைக்கவில்லை. ஆணைக்குழு அதன் வேலையை செய்கிறது. நாங்கள் எங்கள் வேலையினை செய்கிறோம். நேற்று அறிவித்தார்கள் இன்று அலுவலகத்தினை ஆரம்பித்தோம். நேற்று விசேடமாக ஜனாதிபதியை சந்திக்கவில்லை. வாரம் நடக்கும் கூட்டத்திலேயே நானும் பங்கேற்றேன். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு விரைவில் வேட்பாளரை கண்டுபிடிக்க வேண்டும். இது குறித்து கட்சித் தலைமைக்கு அறிவிக்கிறேன். இளம் தலைமைக்கு வாய்ப்புக்கள் கட்டாயம் வழங்குவோம். இன்னும் 69 இலட்சம் மக்கள் எங்களுடன் இருக்கிறார்களா இல்லையா என தேர்தலை வைத்து தான் பார்க்க வேண்டும். எமது ப்ளேனை சொன்னா அடுத்தவர்களும் செய்வார்களே. நாட்டுக்காக நிற்கும் எவருடனும் சேர்ந்து பயணிக்கவும் தயார்…”

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் நேற்று (09) இரவு இடம்பெற்றது.

எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இருவருக்குமிடையிலான 6ஆவது கலந்துரையாடல் இதுவாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »