டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும்
மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த மிரட்டல் இமெயில்களை தொடர்ந்து, டெல்லி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், உடனடியாக பாடசாலை மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர், வெடிகுண்டு தேடுதல் குழுவினர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அனைத்து பாடசாலைகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டதாக தெரிவிக்கபப்டுகின்றன.
இது வெறும் புரளி என்றும் இந்த போலியான மிரட்டலை விடுத்தது யார் என்ற விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியது யார் என்பது குறித்து சைபைர் கிரைம் பொலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.