பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய 5 மாவட்டங்களுக்குதேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த மாவட்டங்களில் 75மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியதையடுத்தே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான தன்மை உருவாகியுள்ளதால், நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.