பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில்
சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.ஏப்ரல் மாதம் ரமழான் மாதத்திற்கான அரச மன்னிப்பு வழங்கப்பட்டதாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கையர்களை எதிர்வரும் நாட்களில் பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளை ஒருங்கிணைக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.