இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 178 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீனவர்களின் 23 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் 264 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் 35 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.