பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பளம் தொடர்பான வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (03) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித்த ராஜகருணா, தம்மிக்க கனேபொல ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வௌியிடப்பட்ட வர்த்தமானியை வலுவற்றதாக்கி, எழுத்தாணை கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, 21 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன.
பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடாமல் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமையால், அதனை செல்லுபடியற்றதாக்குமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.