தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள 1700 ரூபா சம்பள அதிகரிப்பை அரசாங்கம் பரிந்துரைத்தவாறு வழங்க முடியாது என தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேயிலை தோட்ட உரிமையாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் குறித்த சம்பள அதிகரிப்பை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே ரொஷான் ராஜதுரை அந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
“தொழில்துறையில் உள்ள அனைத்து தரப்பினரினதும் நலன்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
எந்தப் பலனையும் தராத இந்தத் தீர்மானத்தின் ஊடாக இந்நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் தொழிலின் ஒவ்வொரு அம்சத்தையும் மேலும் பலவீனப்படுத்தும் என்பது எமது நம்பிக்கை. சிறு தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பிராந்திய தோட்டக் கம்பனிகள் போன்ற நியாயமற்ற சம்பள உயர்வை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கும் முயற்சிகள் தொழில்துறையின் அடிப்படை இயக்கத் தேவைகளைக் குறைப்பதன் மூலம் சாதிக்க முடியாது. முழு பெருந்தோட்ட எதிர்காலமும் ஆபத்தில் உள்ள நிலையில், இலங்கை முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வாதாரமும் ஆபத்தில் உள்ளது என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்."