தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க முடியாது என தோட்ட முதலாளிமார் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கு அதிக செலவாகும் என்பதால் இந்த சம்பளத்தை வழங்க முடியாது என சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடந்த 30ம் திகதி இரவு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தமது நிறுவனங்களுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தேயிலை தோட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி வர்த்தமானியை இரத்து செய்யுமாறு நீதிமன்றத்திற்கு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக தோட்ட நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று தேயிலை தோட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மத்தியில் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
கலந்துரையாடலின் பின்னர் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தற்போது தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 1,000 ரூபாவாகும்.