இந்திய கடல் எல்லை பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றத்திற்காக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் எந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் வேதாரண்யம் கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்வதா அல்லது காவலில் வைத்திருப்பதா என்பது குறித்தான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளில் ஆயுதங்கள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் வைத்திருந்தனரா என்பது குறித்தும் பொலிஸார் தீவிர விசரணையில் ஈடுபட்டுள்ளனர்.