இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
பட்டமளிப்பு விழாவிற்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பல கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 53 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பட்டமளிப்பு விழாவுக்காக பயணித்த மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து ஏற்படுவதற்கு முன்னர் பேருந்தின் பிரேக் செயலிழந்திருக்கலாம் என அந்த நாட்டின் வீதி பாதுகாப்பு பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.