தெற்கு துருக்கியில் அதிவேக வீதியில் பயணிகள் பஸ் ஒன்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 39 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (26) மெர்சின் மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது.
துருக்கியின் தென்கிழக்கு நகரமான தியார்பாகிரில் இருந்து தெற்கில் உள்ள அதானாவுக்கு 28 பயணித்த அதிசொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது பஸ் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதியது. அதனை தொடர்ந்து லொறி ஒன்று மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் குறைந்தது எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு நகரமான தியார்பாகிரில் இருந்து நாட்டின் தெற்கில் உள்ள அதானாவுக்குப் பயணித்த இன்டர்சிட்டி பேருந்தில் 28 பயணிகள் இருந்ததாக அனடோலு தெரிவித்துள்ளது.