ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், விழாவில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி மேலும் கூறுகையில், பாரிய திட்டங்களில் பங்காளித்துவம் உட்பட எந்த நேரத்திலும் நாட்டின் முன்னேற்றத்திற்காக ஈரான் துணை நிற்கும் என்று தெரிவித்திருந்தார்.