அக்டோபர் 7ம் திகதி 2023 இல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை தடுக்கத் தவறியமையினால் தோல்வியை ஒப்புக் கொண்டு தனது பதவியை இராஜினாமா செய்தார் இஸ்ரேல் இராணுவ உளவுப் பிரிவின் தலைவர் அஹரொன் ஹலீவா.
தனது ராஜினாமா கடிதத்தை இன்று இஸ்ரேலிய ராணுவத்திற்கு அவர் வழங்கியதாகவும், ராஜினாமாவை ராணுவம் ஏற்றுக் கொண்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.