உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வகையில் தேசிய மக்கள் கட்சி தனது மே தின பேரணிகளை மே 1ம் திகதி வடக்கு, வடமத்திய, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களின் முக்கிய நகரங்களில் நடத்த முடிவு செய்துள்ளது.
யாழ்ப்பாணம், அனுராதபுரம், மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் பேரணிகள் நடத்தப்பட உள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பேரணி நடைபெறும் இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.