சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அடுத்த கடன் தவணைக்குரிய இரண்டாவது கடன் மீளாய்வை இலங்கை நிறைவு செய்துள்ளதாகவும் குறித்த மீளாய்வின் அடிப்படையில், ஊழியர் மட்ட இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்றுக் குழுவின் இணக்கப்பாடு வழங்கப்படாதுள்ளதாக அவர் கூறினார்.
அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முழுமைப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனைகள் சில காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.