Our Feeds


Tuesday, April 23, 2024

ShortNews Admin

Fox Hill Journey தொடர்பிலான இராணுவத்தின் அறிவிப்பு


 Fox Hill இல் இடம்பெற்ற பயங்கர விபத்தின் பின்னர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட Fox Hill Journey எனும் DJ இரவு தொடர்பில் இலங்கை இராணுவத் தலைமையகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த DJ இரவுடன் இராணுவம் எந்த வகையிலும் ஈடுபடவில்லை என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பண்டாரவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றினால் Fox Hill Journey எனும் DJ இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், Fox Hill Supercross தொடரை காண வரும் பார்வையாளர்களை குறிவைத்து Fox Hill Journey DJ நைட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையக அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரோ அல்லது இலங்கை ஆட்டோமொபைல் விளையாட்டு சங்கத்தினரோ ஆதரவின்றி முழு இராணுவமும் அதிர்ச்சியடைந்திருந்த வேளையில் Fox Hill Journey DJ இரவு ஏற்பாடு செய்யப்பட்டதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »