பலாங்கொடை ஹட்டன் வீதியில் பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் 7 பேரை ஏற்றிச் சென்ற வேன் குன்றின் மீது மேதி விபத்துக்குள்ளானதில் அவர்கள் அனைவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிவனொளிபாத மலையில் இருந்து விரகெட்டிய பகுதிக்கு சென்று கொண்டிருந்த குழுவினரே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பலாங்கொடை பின்னவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.