தென்கொரியாவில் மொத்தம் 300 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கூட்டணி 189 இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் பழமைவாத கட்சி கூட்டணி 111 இடங்களை மட்டுமே வென்றுள்ளன. இதன் மூலம் 5-ல் 3 பங்கு இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றது.
எனவே தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹான் டக்-சூ மற்றும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர்கள் பலர் தங்களது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூனும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். முக்கிய தலைவர்கள் பதவி விலகுவது ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் 200 இடங்களை வென்று ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யக்கூடிய சூப்பர் மெஜாரிட்டியை அவர்கள் பெறவில்லை. எனினும் மீதமுள்ள 3 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி யூன் சுக் இயோல் தீவிரமான அரசியல் எதிர்ப்பை சமாளிக்க நேரிடும் என அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.