குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில் இது இடம்பெற்றுள்ளது.
குடிபோதையில் வாகனம் செலுத்தும் நபரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5,000 ரூபா வழங்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு தினத்தன்று குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இரத்த பரிசோதனை கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்காக 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.