அயர்லாந்தின் பிரதமராக இருந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த லியோ வராத்கா் கடந்த மாதம் திடீரென தனது பதவியை இராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து சைமன் ஹரிஸ் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடா்பில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஹரிஸுக்கு ஆதரவாக 88 வாக்குகளும், எதிராக 69 வாக்குகளும் பதிவாகியிருந்தன.
அந்தவகையில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து, தலைநகா் டூப்ளினிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் சைமன் ஹரிஸ் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.