ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை ஏலம் விடுவதாகவும், இந்தக் கட்சியை தனது பாதுகாப்பு, வழக்கு மற்றும் நிதி நலன்களுக்காக பயன்படுத்தினால் அது ஒரு கடுமையான அநீதி என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
கட்சியின் நிறைவேற்று சபையில் இணையும் தகுதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லாத காரணத்தினால் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதோடு பதில் செயலாளரும் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதால் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தை நாடப்போவதாக மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.