ஈராக்கில் தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கி, அவர்களுக்கு
10 முதல் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இச் சட்டத்தின் கீழ் யாரேனும் தங்களின் பாலினத்தை மாற்ற முயன்றாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நாட்டின் மத உணர்வுகளை நிலை நிறுத்த உதவும் என சிலர் ஆதரித்தாலும், இது ஒரு பெரும் கரும்புள்ளி என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.