கலால் உரிமம் வழங்குவது நிறுத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உரிய முறைமையின் கீழ் உரிய உரிமம் வழங்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கலால் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“மிகவும் முறையாக கலால் உரிமம் வழங்குகிறோம்.நாடாளுமன்றம் அங்கீகரித்த விதிகளின் அடிப்படையில் யாராவது உரிமம் கோரினால், எதிர்ப்பு குரல்கள், உள்ளூர் மக்களின் எதிர்ப்பு என அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் அவை வழங்கப்படுகின்றன.
ஆனால், கலால் துறை எனக்கு முறைப்பாடு அளித்தது. அங்கீகரிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில்தான் உரிமம் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூறியதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கலால் உரிமம் வழங்குவதை நிறுத்தவில்லை. விதிகளை அதிகமாக அமுல்படுத்தச் சொல்லியிருப்பது மிகவும் நல்லது. . நாங்கள் ஏற்கனவே அதைப் பின்பற்றி வருகிறோம்..”