முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனுவை விசாரணைக்கு எடுப்பதற்காக அறிவித்தல் விடுப்பதா? இல்லையா? என்ற தீர்மானம் எதிர்வரும் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை முடியும் வரை தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கெஹலிய ரம்புக்வெல்ல சார்பில் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.