வவுனியா நெளுக்குளம் பகுதியில் உள்ள குளத்தினுள் சடலம் மிதப்பதை அவதானித்த மக்கள் நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குளக்கட்டின் மேற்பகுதியில் காலணி காணப்பட்டதால் இச்சம்பவம் தவறுதலாக இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த மரணம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுப்பதுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் 55 தொடக்கம் 60 வயதுக்குட்டவராக இருக்கலாம் எனவும் அவர் மஞ்சள் நிற மேற்சட்டையும் சாரமும் அணிந்துள்ளாரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.