தாய்வானின் ஹுவாலியன் நகரில் இன்று(27) 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அதேவேளை, தாய்வானின் தலைநகர் தைபேயிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என தாய்வான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மாத தொடக்கத்தில் தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 17 பேர் உயிரிழந்ததோடு 1,000இற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.