Our Feeds


Saturday, April 6, 2024

News Editor

ஹிங்குராங்கொடை விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை


 ஹிங்குராங்கொட உள்நாட்டு விமான நிலையத்தை மறுசீரமைக்கும் திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஹிங்குராங்கொடை சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக இரண்டு பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக 2, 287 மீற்றர் நீளமும் 46 மீற்றர் அகலமும் கொண்ட பாதை 2,500 மீற்றராக நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான நவீனமயமாக்கல் திட்டத்திற்கு மொத்தம் 17 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடதத்க்கது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »