Our Feeds


Sunday, April 28, 2024

ShortNews Admin

நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை

நாகப்பட்டினம் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் மே 13 ஆம் திகதி முதல் கப்பல் பயணம் ஆரம்பிக்கவுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி பிரதமர் மோடியால் காணொளி காட்சி மூலம் ஆரம்பிக்கப்பட்டது.

எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி சிவகங்கை என்ற பெயர் கொண்ட வேறொரு கப்பல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செல்ல உள்ளது. ஏற்கனவே செரியாபாணி என்ற கப்பல் இயங்கிய நிலையில் வேறொரு கப்பல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள கப்பலில் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது

நாகையில் இருந்து இலங்கைக்கு கட்டணமும் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து சேவையை சரியாக இயக்கமுடியாத நிலை உருவானது. குறைவான பயணிகளை மட்டுமே கொண்டு இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து ஏற்பட்ட புயல் மற்றும் கடும் மழை காரணமாக போக்குரவத்து பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக சுமார் 6 மாத காலம் போக்குவரத்து செயல்படவில்லை. மழையை காரணம் காட்டி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »