Our Feeds


Wednesday, April 24, 2024

ShortNews Admin

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு தொழில்சார் கல்வி வாய்ப்புகள்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ்

நிறுவப்பட்டுள்ள தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் அல்லது NIOSH இல் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 13 மாணவர்கள், பாதுகாப்பு மற்றும் இயந்திர பொறியியல் துறையில் கற்பதற்கு தென் கொரியா செல்ல தகுதி பெற்றுள்ளனர்.

அந்த 13 பேரில் மூவருக்கு அவர்களின் கற்கை தொடர்பான சான்றிதழ்கள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார.
கொரியாவில் உள்ள சாங்ஷின் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருட பட்டப்படிப்புக்கு பிறகு அதனுடன் தொடர்புடைய துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற முடியுமென்ற நம்பிக்கையுடன் கொரியாவுக்குச் சென்றனர்.

தென் கொரியாவில் பாதுகாப்பு மற்றும் இயந்திர பொறியியல் பட்டப்படிப்பைக் கற்க இந்த புதிய கற்கை வாய்ப்புகளை வழங்க தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஏற்பாடு செய்துள்ளார். .

தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் அல்லது NIOSH இல் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பயிற்சியை முடித்த பிறகு, மாணவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பொதுப் பட்டப்படிப்பை வழங்க சாங்ஷின் பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது .

இலங்கையிலுள்ள இளம் மாணவர்களுக்கான புதிய உயர்கல்வி வாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் பொறியியல் துறையில் மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் இந்த பாடநெறி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இலங்கை அல்லது கொரியாவில் மிகவும் புதுப்பித்த தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பாக வேலை செய்ய உதவுகிறது. இது மாணவர்களின் வாழ்க்கையில் விபத்துகளைத் தடுப்பதில் செயிற்திறனை மேம்படுத்தும் நான்கு வருட பட்டப்படிப்பு திட்டமாகும்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »