நுரைச்சோலை நாவக்காடு பகுதியில் இன்று (22) பொலிஸ் வேடமணிந்த குழுவொன்று வீடொன்றிற்குள் புகுந்து தங்க ஆபரணங்கள், கையடக்கதொலைபேசி, பணம் உள்ளிட்ட 90 இலட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை கொள்ளையடித்து பின்னர் அங்கிருந்தவர்களை அறையில் அடைத்து வைத்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவக்காடு பகுதியில் புகையிலை மற்றும் மரக்கறி உற்பத்தியாளரின் வீடு இவ்வாறு கொள்ளையிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளைச் சம்பவத்தின் போது இந்த வீட்டின் வர்த்தகர், அவரது மனைவி, தாய் மற்றும் இந்த வர்த்தகரின் மூன்று மகள்கள் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் சீருடைக்கு நிகரான சீருடையில் வந்துள்ள கொள்ளை கும்பல், யுக்திய நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்று கூறி, வீட்டினுள் வந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்
குறித்த சந்தேக நபர்களை இதுவரை பொலிஸாரால் அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது