கொழும்பு சங்கராஜா மாவத்தை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மரக்கிளையொன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறி மற்றும் முச்சக்கரவண்டியொன்று சேந்தமடைந்துள்ளன.
தற்போது அந்த இடத்தை சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றன.