தபால் விநியோக ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடிதங்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் விநியோக ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 2000 ஊழியர்களுக்கு வெற்றிடம் காணப்படுவதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளமை மற்றும் புதிய அதிகாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமை ஆகிய காரணங்களால் தபால் சேவையில் சில நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.