இன்று (12) அதிகாலை கடுவெல கொரதொட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்ட போது கடுவெல அதுருகிரி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் அது வெடிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீட்டின் முன் சில மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு ஓடிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது மேலும் இது வெளிநாட்டில் இருக்கும் "கைவரு முதுவா" என்பவரின் வலையமைப்பாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொரத்தோட்ட "கைவரு முதுவா" என்பவருக்கு பல வர்த்தகர்கள் கப்பம் கட்ட மறுத்ததால், கூலி ஆட்களை பயன்படுத்தி இவ்வாறு அச்சுறுத்தி வருவதாக நவகமுவ காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.