அரகலய போராட்டத்தின் போது கோஷமாக மாறிய “சிஸ்டம் சேன்ஜ்” என்பதை தமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புனரமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட அரசியல் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரகலய போராட்டத்தின் போது தீயிட்டு அழிக்கப்பட்ட இந்த அலுவலகம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,
"என் தாத்தாவின் சிலை உடைக்கப்பட்டது. நாங்கள் குடியிருந்த வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, இந்த பிள்ளைகளை வெறுப்பதில் பயனில்லை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவால் தூண்டப்பட்டனர், குழந்தைகள் பொதுவாக கொஞ்சம் குறும்புக்காரர்கள், அதைப் புரிந்து கொள்ள நான் தந்தையாக வேண்டி இருந்தது. பெரியவர்களாகிய உங்கள் பொறுப்பு, அந்த குழந்தைகளுக்கு யதார்த்தத்தை விளக்குவது, அவர்கள் உலகத்தை திறந்த மனதுடன் பார்க்க வேண்டும்."