வெற்றிலை பறிக்க மரத்தில் ஏறியவர் அருகிலிருந்த கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெற்றிலை பறிப்பதற்காக தோட்டத்தில் உள்ள 40 அடி உயரமுடைய மரமொன்றில் ஏறி வெற்றிலை பறிக்க முயன்றுள்ளார்.
இதன்போது, இந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் மரத்தில் ஏறியிருந்தவர் அருகிலிருந்த கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.