அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.
மே மாதம் இரண்டாம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் இணைத் தலைவர் திரு.தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்தார்.
சம்பளப் பிரச்சினையை நிவர்த்தி செய்யக் கோரி கடந்த காலங்களில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.