மாத்தளை வில்கமுவ பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கியை எடுத்துச் சென்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் வில்கமுவ பொலிஸாரால் அரலகங்வில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாய 10, நுககொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் போது குறித்த சந்தேக நபர் புத்தர் சிலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கியை விட்டுச் சென்ற நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.