வெலிகந்த, சிங்கபுர வீதியில்; இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதியில் சென்ற மாடு ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் ஒட்டுனரும், பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரும் பலத்த காயங்களுடன் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகந்த பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.