சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசப் பிரிவின் பிரதி
அமைச்சர் திருமதி சன் ஹயன் இன்று (23) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.அதன்படி, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இன்று (23) நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்த உள்ளார்.