தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நாளை (5) முதல் விசேட பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கிராமங்களுக்கு செல்வதற்காக சுமார் 200 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் கொழும்பில் இருந்தும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் சேவையில் ஈடுபடும் எனவும் அவர் தெரிவித்தார்.