Our Feeds


Wednesday, April 10, 2024

SHAHNI RAMEES

ரணில் புதிய சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது: ஜனாதிபதியின் ஆலோசகர்..!


 தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் யானை அல்லது பூ மொட்டு அல்லாமல் முற்றிலும் புதிய சின்னத்தில் போட்டியிடுவார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்டவருமான ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். 


ஜனாதிபதி விக்கிரமசிங்க தேசிய வேட்பாளராக பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவார் என பேராசிரியர் மாரசிங்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.


அமைச்சர் பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் ஜனாதிபதி தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் தாம் உட்பட பலருக்கு பிரச்சினை இருப்பதாக கூறியுள்ளனர். 


அதேபோன்று, அவர் பொஹொடுவவின் கீழ் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள எமக்கும் பிரச்சினை உள்ளது. எனவே திரு.விக்கிரமசிங்க புதிய சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார். 


அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் 80 சதவீதத்திற்கும் அதிகமான சமகி ஜன பலவேகய (SJB) திரு. விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறினார்.


SJB மற்றும் UNP ஆகிய இரண்டும் ஒன்றிணைய வேண்டும் என SJB பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள முன்வைத்துள்ள பிரேரணையை நாம் வரவேற்கிறோம். SJB தலைவர் சஜித் பிரேமதாச அத்தகைய நடவடிக்கைக்கு எதிராக முடிவெடுத்தாலும், SJB யில் உள்ள மற்றவர்கள் திரு. விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ”என்று அவர் கூறினார். 


அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இரண்டையும் ஒரே நாளில் நடத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »