இந்த மாதமும் (ஏப்ரல்) உள்நாட்டு எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார்.
சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் டெய்லி சிலோன் கருத்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வடைந்துள்ளதன் அனுகூலத்தை மக்களுக்கு வழங்க முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும், எரிவாயு விலையில் மாற்றமில்லாமல் இருக்கவே தாம் உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (02) அறிவிக்கப்படும் என முதித பீரிஸ் தெரிவித்தார்.