இன்று (26) அதிகாலை மாங்குளம் வசந்தநகர் சந்திக்கு அருகில் இராணுவ வீரர்கள் பயணித்த கெப் வண்டி மீது லாரி ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த 10 இராணுவ வீரர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குழுவினர் பயணித்த கெப் வண்டி விபத்துக்குள்ளாகியதாகவும், இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.