கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 11 பாடசாலைகளில் தரம் 9-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் தொழில் வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு பணிப்பாளர் E.A.D.S.சேனாரத்ன தெரிவித்தார்.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் 13 கைத்தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை காலப்பகுதியிலும் அதற்கு பின்னரும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயற்பாடாக இந்த தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
மின்சார மோட்டார் சைக்கிள் பராமரிப்பு, ஹோட்டல்கள், அழகுக்கலை மற்றும் கட்டட ஓவியம் போன்ற திட்டங்கள் இதில் அடங்குகின்றன.